ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது அடுக்கடுக்கான செக்ஸ் புகார்களை கூறி அதிரவைத்து வருகிறார். ஸ்ரீரெட்டிக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா மற்றும் சில பெண்கள் அமைப்பு ஆதரவாக இருந்து வருகிறது.
சில நாட்களாக மவுனமாக இருந்த ஸ்ரீரெட்டி இப்போது அடுத்த அதிரடி புகாரை வெளியிட்டுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி மீதும் புகார் கூறியுள்ளார்.
"நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த பெண் யாரென்று அவர் குறிப்பிடவில்லை. இந்த குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நானி இன்னும் பதிலளிக்கவில்லை.