ஹேப்பி என்டிங் ஆர். ஜே. பாலாஜியின் புதிய படம்! | அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியாகும் இளையராஜாவின் சிம்பொனி இசை | ‛கேம் சேஞ்சர்' டீசர் தேதியை அறிவித்த படக்குழு | ஓடிடிக்கு வரும் ரஜினியின் வேட்டையன் | ‛பாட்டல் ராதா' படம் டிசம்பர் 20ல் ரிலீஸ் | 48வது படம் : சிம்பு எடுத்த முடிவு | ஜெய் ஹனுமான் ஆக ரிஷப் ஷெட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ஒரு காதல் வந்திருக்கு : மத்தாப்பாய் பூரிக்கும் துஷாரா | புது பாடகர்கள், கவிஞர்களை தேடுகிறேன் : 'பற பற பற பறவை' ரகுநந்தன் |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப், மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி, சிறை சென்று, பின் ஜாமினில் வெளிவந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் வழக்கு திடீரென சூடு பிடிப்பதும், பின்னர் அப்படியே அமுங்கிப்போவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதனால் திலீப் நிம்மதியாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தநிலையில் இந்த வழக்கில் மீண்டும் திலீப்பிடம் விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு மனு செய்துள்ளனர் கேரள போலீஸார். சமீபத்தில் இயக்குனர் பாலசந்திர குமார் என்பவர், நடிகை காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வீடியோவை திலீப் தனது காரில் அமர்ந்தபடி பார்த்தார். அந்த வீடியோவை ஒரு விஐபி தான் அவரிடம் கொடுத்தார் என பரபரப்பு தகவல் ஒன்றை கூறினார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வீடியோ திலீப் பார்வைக்கு எப்படி வந்தது, பாலசந்திர குமார் சொல்வது உண்மையா என்கிற கோணத்தில் விசாரிக்க இந்த வழக்கை மீண்டும் போலீஸார் தூசு தட்ட தயாராகி வருகின்றனர். இது திலீப்புக்கு புதிய சிக்கலை கொண்டுவருமா அல்லது வழக்கம்போல புஸ்வானம் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.