‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரேஸ் 3 படத்தில் நடிகர் அனில் கபூர் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு அப்பாவாக அனில் கபூர் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தவுரானி தற்போது மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தில் சல்மானுக்கு அப்பாவாக அனில் கபூர் நடிக்கவில்லை. குடும்ப தலைவர் வேடத்திலேயே அனில் கபூர் நடிக்கிறார் என்றார். ரெமோ டிசவுசா இயக்கும் ரேஸ் 3 படத்தை ரமேஷ் தவுரானி தயாரிக்கிறார். இப்படத்தில் சல்மான் கான், அனில் கபூர், பாபி தியோல், ஜாக்குலின் பெர்னாண்டஸ், டெய்சி ஷா உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படம் 2018 ம் ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.