‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அட்டகத்தி, மெட்ராஸ் என இரண்டு படங்களை இயக்கியிருந்த பா.ரஞ்சித்துக்கு மூன்றாவது படமே ரஜினியின் கபாலி கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டு படத்தை ஹிட்டாக கொடுத்ததால் பேசப்படும் இயக்குனராகி விட்டார். அதோடு, ரஜினியின் 161வது படத்தையும் இயக்கும் வாய்ப்பினை பெற்று இப்போது பரபரப்பான இயக்குனராகி விட்டார்.
மேலும், மே 28-ந் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்திற்காக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ஹூமா குரோஷியை ஒப்பந்தம் செய்துள்ள பா.ரஞ்சித், தற்போது இயக்குனர் சமுத்திரகனியை ஒரு முக்கிய வேடத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். தனது அட்டகத்தி, மெட்ராஸ் படங்களில் நடித்த பல நடிகர் - நடிகைகளை கபாலி படத்தில் நடிக்க வைத்த ரஞ்சித். இந்த படத்தில் அவர்களில் யாரையும் நடிக்கவில்லை. ஹூமா குரோஷி, சமுத்திரகனியை போன்று இதற்கு முன்பு தான் இணைந்து பணியாற்றாத பல பிரபலங்களை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.