‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருமணத்திற்கு முன்பாக லிவ் இன் ரிலேஷன்சிப் வாழ்க்கையை வாழ விரும்புவதாக பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் கூறியுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூரின் வாரிசு அர்ஜூன் கபூர். பாலிவுட்டில் நடித்து வரும் இவர் இப்போது ஹாப் கேர்ள்பிரண்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மே 19ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதனால் புரொமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார் அர்ஜூன்.
இந்நிலையில் தனக்கு லிவ் இன் ரிலேஷன்சிப் வாழ்க்கை வாழ விரும்புவதாக அர்ஜூன் கபூர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... "ஒரு பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது, அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினால், அதற்கு முன்பாக அவருடன் லிவ் இன் ரிலேஷன்சிப் வாழ்க்கை வாழ விரும்புவேன். ஏனென்றால் அப்போது தான் அந்த பெண்ணை பற்றிய நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்" என்கிறார்.