தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தமிழ்த் திரையுலகத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு ஹீரோக்களுக்கிடையே கடும் போட்டி இருக்கும். தியாகராஜ பாகவதர் - பியு. சின்னப்பா, எம்ஜிஆர் - சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் - கமல்ஹாசன், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் என ஒருவருக்கு மற்றவரை கடும் போட்டியாளராக ரசிகர்களும் நினைப்பார்கள், மீடியாக்களும் நினைப்பார்கள். அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி இருவரைப் பற்றித்தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்குள்ளும் பகையை வளர்க்க சிலர் முயற்சித்தாலும் இருவரும் வெளிப்படையாகவே தங்களுக்குள் எந்தப் போட்டியும் இல்லை என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதற்கும் மேலாக 'றெக்க' படத்தில் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. அது படம் வந்த பிறகுதான் ரசிகர்களுக்கும் தெரிய வரும். அதற்கு முன்னதாகவே நாம் தரும் ஒரு விஷயம் இதுதான். படத்தில் இடம் பெற்றுள்ள 'விர்ரு..விர்ரு...' பாடல் காட்சியில் சிவகார்த்திகேயன் பேனர் முன்னால் விஜய்சேதுபதி நடனமாடுவது போல ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல அந்தப் பாடலின் முடிவில் 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயன் செய்த அந்த 'மான் ஸ்டைல்'-யும் விஜய் சேதுபதி செய்வது போல் பாடல் முடிகிறது.
அப்படி ஒரு காட்சியில் எப்படி நடித்தீர்கள் என விஜய்சேதுபதியிடம் நேற்று நடந்த 'றெக்க' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய்சேதுபதில் அளித்த பதில்தான் ஹைலைட்.
“படத்துல அந்த விர்ரு..விர்ரு பாடல் காட்சியை ஒரு தியேட்டர்ல எடுக்கப் போறோம்னு டைரக்டர் சொன்னாரு. அப்ப தியேட்டர்ல ஓடற படத்தை எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் அவங்க படங்கள்ல ஏதாவது ஒண்ண இயக்குனர் காட்டலாம்னு முடிவு பண்ணியிருந்தாரு. ஆனால், நான் சிவகார்த்திகேயன் நடிச்ச படத்தோட பேனர்களை வையுங்க. நீங்க சொன்னா எல்லாரையும் ஏற்கெனவே இந்த மாதிரி காட்சியில கொண்டாடியிருக்காங்க. என் சமகாலத்து நடிகர் சிவகார்த்திகேயன், அவரை நான் கொண்டாடற மாதிரி இருக்கட்டும். அதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லன்னு சொன்னேன். அதோட பாடல் காட்சி கடைசியா முடியும் போது அந்த மான் கராத்தே ஸ்டைல் இருந்தால் நல்லா இருக்கும்னு மாஸ்டர் கிட்ட சொன்னேன். அவரும் அப்படியே வச்சிட்டாரு,” என்றார் விஜய்சேதுபதி.
விஜய்சேதுபதி நடித்துள்ள 'றெக்க' படமும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' படமும் அக்டோபர் 7ம் தேதி ஒன்றாக வெளியாகப் போகிறது. அது பற்றியும் அவரிடம் கேட்ட போது, “தொடர்ந்து விடுமுறை நாட்கள், ரசிகர்களுக்கு ஒரு படம் வந்தால் போதாது. அதனால 'றெக்க' படமும் வந்துடட்டுமே. அதோட 'ரெமோ' பல கோடி ரூபாய் செலவில உருவாக்கப்பட்டிருக்கு. ரெண்டு படமும் வெற்றி பெறட்டும். நாங்க ஒண்ணா வர்றதப் பத்தி கேக்கறீங்க, ஆனால் சதீஷ் (காமெடி நடிகர்) அன்னைக்கு வெளியாகற 'ரெமோ, றெக்க, தேவி' மூணு படங்கள்லயும் நடிச்சிருக்காரு. அதைப் பத்திக் கேளுங்க,” என அவர் பக்கம் கைகாட்டி விட்டார் விஜய்சேதுபதி...அதானே...!