‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பெரிய ஹீரோக்கள் கைவிட்ட மில்க் இயக்குனர் புதுமுகங்களை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போகிறார். கடைசியாக இயக்கிய கரகாட்ட படத்தின் நிஜ தயாரிப்பாளர் அந்த படத்தில் நடித்த தாடி இயக்குனர். பல கோடிகளை இழந்தாலும் குருநாதர் படத்துல நடிச்சதே பெருசுன்னு ஆறுதல் தேடிக்கிட்டாரு தாடி.
அடுத்த படமும் அப்படித்தானாம். ஹீரோவாக நடிக்கிய பையனோட அப்பாதான் நிஜமான புரட்யூசராம். மகனை ஹீரோவாக்க இரண்டு சொந்தப் படங்களை எடுத்தவர்தான் அவர். இப்போது மகனை மில்க் இயக்குனர் கையில் ஒப்படைத்து விட்டு தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார். ஆனால் வெளியில் மில்க் இயக்குனர் தயாரிப்பதாகத்தான் அறிவிக்கப்படுமாம். லாபம் வந்தால் நமக்கு, நஷ்டம் வந்தால் தயாரிப்பாளருக்கு என்பதுதான் மில்க் இயக்குனரின் பாலிசியாம். இதனால்தான் மில்கை கண்டாலே டாப் ஹீரோக்கள் துள்ளிக்கு குதித்து ஓடுறாங்களாம்.