மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர், கத்ரீனா கைப், அடா சர்மா ஆகியோர் முதன்மை ரோலில் நடித்து வரும் படம் ‛ஜகா ஜசூஸ்'. இப்படம் உருவாக என்ன காரணம் என்று சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் இயக்குநர் அனுராக் பாசுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛ஜகா ஜசூஸ் ஒரு காமெடி படம். என்னுடைய பார்பி படம் பார்த்துவிட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் என்னுடைய இளைய மகள் படம் பார்த்துவிட்டு ரசிக்கவில்லை, புரியவில்லை என்பது போன்று இருந்தார். இது என்னை வருத்தமடைய செய்தது. இதையடுத்து குழந்தைகளும் கவரும்படியாக படம் இயக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்வெளிப்பாடாக உருவாகி வரும் படம் தான் ‛ஜகா ஜசூஸ்' '' என்று கூறியுள்ளார்.