ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாகார்ஜூனா - அமலா தம்பதியரின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜூவா படத்தில் அகிலுக்கு ஜோடியாக தனது முதல் தெலுங்கு படத்தில் நடித்தார் பாலிவுட் நடிகை சாய்ஷா சைகள். இப்படம் தோல்வியைத் தழுவியதால் தெலுங்கு படங்களை தவிர்த்து ஹிந்தியில் கவனம் செலுத்தி வரும் சேஷா பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து “ஷிவாய்” படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இயக்குனர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ராஜ் தருண் நடிக்கும் காமெடி படத்தில் நாயகியாக நடிக்க சேஷாவை இயக்குனர் அனுகியுள்ளார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க சேஷா மறுத்துவிட்டாராம். ஏ.கே.எண்டர்டையின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கேட்ட சம்பளம் தருவதாக் கூறியும் சாய்ஷா மறுத்து விட்டாராம். முதல் படம் தோல்வியைத் தழுவிதால் அடுத்த படத்தில் அவசரம் காட்டாமல் நல்ல கதைக்காக சாய்ஷா காத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.