‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வேல்ஸ் பல்கலைக்கழகம், நடிகர் நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க இருக்கிறது. தனது 6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985 ஆம் ஆண்டு இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள் “கல்யாண அகதிகள்” என்ற திரைபடத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை தொடர்கிறார்.
தற்போது நடிகராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், கலைத்துறையில் நாசரின் சேவையை பாராட்டி பிரபல கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைக்கழகம், வருகிற 7ம் தேதி, காலை 9 மணியளவில் சென்னை, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் “டாக்டர் பட்டம்” வழங்கி கௌரவிக்க உள்ளது.
இவ்விழாவில் வேல்ஸ் பல்கலைகழக நிறுவனர் டாக்டர். ஐசரி கணேஷ் தலைமையேற்க, அவருடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி டாக்டர்.P.S.சவ்ஹான் டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்.