ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் ஒரு படம் நடித்து வெளிவருவதற்கு முன்னரே சுமார் 10 படங்களில் நடித்து வரும் பெருமையப் பெற்ற நடிகையாக இருப்பர் கீர்த்தி சுரேஷ். 70களில் இறுதியில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் மலையாளத்தில் முன்னணி ஹீரோயினாக விளங்கிய நடிகை மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ். இவர் அறிமுகமாகியுள்ள 'இது என்ன மாயம்' படம் நேற்று வெளியாகியுள்ளது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கீர்த்தி சுரேஷ் தன் அறிமுகப்படத்தில் எப்படி இருக்கிறார் ? என்ற பேச்சு நேற்று படம் பார்த்த பலரிடமும் இருந்தது.
படத்தின் இடைவேளைக்குப் பின்னர்தான் கீர்த்தி சுரேஷை முழு மேக்கப்புடன் அழகாகக் காட்டியுள்ளார்கள். படத்தின் முன் பாதியில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளவருக்கு மேக்கப்பே போடவில்லை போலும். கொஞ்சம் கருத்துப் போன முகத்துடனும், பேச்சில் கூட தயக்கத்துடனும் முன் பாதியில் நடிக்க வைத்துள்ளார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. கலகலப்பான கல்லூரி மாணவியாக முதல் காட்சியில் அறிமுகப்படுத்திவிட்டு அதன் பின் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மையை முற்றிலுமாக மாற்றி விட்டார்கள். இருந்தாலும் இரண்டாவது பாதியில் கொஞ்சம் அழகாகக் காட்டிவிட்டதால் முதலில் காட்டியதற்கு மோசமில்லை என்றாகிவிட்டது.
அடுத்து 'ரஜினி முருகன்' படத்திலாவது இவருடைய அழகையும், நடிப்பையும் சரியாகப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று நம்புவோமாக...!