‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கமல் நடித்த உத்தம வில்லன் படம் கடந்த மே 1ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் எழுந்த சில வியாபாரம் மற்றும் பண வரவு செலவு பிரச்சினைகள் காரணமாக அன்று படம் வெளிவரவில்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு முடிவுக்கு வந்து, நேற்று படம் வெளிவந்தது. படம் ஒரு நாள் தாமதத்திற்காக தயாரிப்பாளரும், இயக்குனருமான லிங்குசாமி ரசிகர்களிடம் கண்ணீர்மல்க மன்னிப்பு கேட்டார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: கமல் சார் படத்தையும், ரஜினி சார் படத்தையும், முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் பழக்கத்தை கொண்டவன் நான். இப்போதும் அப்படித்தான். ஆனால் அந்த முதல் நாள் படம் வெளிவராவிட்டால் அந்த ரசிகன் எப்படி கலங்கிப்போவான் என்பதை நான் அனுபவ ரீதியாக உணர்ந்தவன். என்னால் கமல் ரசிகர்கள் ஒரு நாள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். இதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.