‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'நேரம்' படத்தில் நடித்த நிவின் பாலியின் நேரம் இப்போது ரொம்ப நன்றாகவே இருக்கிறது. கடந்த வருடம் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டாக, இந்த வருட ஆரம்பமே அவருக்கு 'மிலி'யின் வெற்றியோடுதான் ஆரம்பமாகியிருக்கிறது. தற்போது 'ஒரு வடக்கன் செல்பி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இந்தப்படத்தை இயக்கும் பிரஜித், வினீத் சீனிவாசன் இயக்கிய, 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்', 'தட்டத்தின் மறயத்து' ஆகிய படங்களில் துணை இயக்குனராக வேலை பார்த்தவர்.
அந்தப்படங்களில் ஹீரோவாக நடித்த நிவின் பாலிக்கும். இவருக்கும் ஏற்பட்ட நட்பும் புரிதலும் தான் இப்போது 'ஒரு வடக்கன் செல்பி' படம் உருவாக காரணமாக அமைந்திருக்கிறது. இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் மஞ்சிமா மோகன் சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். சரி வடக்கன் செல்பி சொல்லவரும் கதை என்ன தெரியுமா..?