ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹான் இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் மட்டுமல்லாது இப்போது விளம்பர பங்களிலும் அவர் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், ரன்பீர் கபூருடன், எலக்ட்ரானிக் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்தார் ஸ்ருதி. தற்போது இந்த விளம்பரங்கள் அனைத்து டிவி மற்றும் இணையதளங்களில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக ஆடை நிறுவனம் ஒன்றுக்கு விளம்பர தூரதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தென்னிந்தியாவில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் இது தவிர ஜெர்மனியை சேர்ந்த ஷூ கம்பெனி ஒன்றுக்கும் ஸ்ருதி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆக மொத்தம் சினிமா படங்களில் மட்டுமல்ல, விளம்பர படங்களிலும் பிஸி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி.