Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் ‛ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்' நிகழ்ச்சியின் 15வது சீசன்

12 ஏப், 2024 - 10:57 IST
எழுத்தின் அளவு:
15th-season-of-Sunny-Leones-Tamil-show-Splitsvilla

'ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்' நிகழ்ச்சியின் 15வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே.

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மிகவும் பிரபலமான, அதிக பார்வையாளார்களை கொண்ட நிகழ்ச்சி “ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு எக்கச்சக்க இளசுகளின் ஆதரவு இருந்து வருகிறது. இளம் வயது ஆண், பெண்களை கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியின் கரு அமைந்திருப்பதால், இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதைவிடவும் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோனி தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். சன்னிலியோனின் உடைக்காகவும் அவரின் அழகுக்காகவும், அவரை பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை காண்பவர்கள் பலர்.

இந்த நிலையில், பிரபல டேட்டிங் நிகழ்ச்சியான ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் சமீபத்திய சீசனுக்கு தயாராகிவிட்டார் சன்னி லியோன். (Splitsvilla X5) 'ஸ்ப்ளிட்ஸ் வில்லா' நிகழ்ச்சியின் 15 வது சீஸனின் 'எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்' என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி.

அல்தாப் ராஜா மற்றும் ஆகாசா சிங் பாடியுள்ள இந்தப் பாடல், 'ஸ்பிளிட்ஸ்வில்லா' சீசனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காண்போருக்கு புரிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ப்ளிட்ஸ் வில்லா' நிகழ்ச்சியின் 15 வது சீசன் மீதான எதிர்பார்ப்பை இந்த ஆன்தம் கிளறியுள்ளது என்றே கூறலாம். இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தளம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன், இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், 'ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்' நிகழ்ச்சியின் 15வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. MTV ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான்கான் படத்தின் தலைப்பு வெளியானதுஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான்கான் ... காதலை உறுதிப்படுத்திய ஜான்வி கபூர் காதலை உறுதிப்படுத்திய ஜான்வி கபூர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in