‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
"பருத்தி வீரன் படத்தில் கிராமத்து, "முத்தழகியாக நடித்து, தேசிய விருது பெற்றவர் ப்ரியாமணி. அதன் பின், அவரது உடல் அழகை குறி வைத்தே பட வாய்ப்பு வந்ததால், தெலுங்கில் முன்னணி கிளாமர் நடிகைகளில், தானும் ஒருவராகிவிட்டார். தன்னை, எந்த நடிகைகளும் போட்டி மனப்பான்மையுடன் பார்க்கக்கூடாது என்பதற்காக, தமன்னா, த்ரிஷா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் சிறப்பாக நடித்திருந்ததால், அவர்களை மனதார பாராட்டி, யாரும் தன்னை போட்டியாக கருதாத சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளார். இதனால் தெலுங்கில், தற்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார், ப்ரியாமணி. இந்த நேரத்தில், பாலிவுட்டிலும் கால்பதிக்க நேரம் பார்த்து வந்தவர், ஷாரூக் கான் நடிக்கும்," சென்னை - எக்ஸ்பிரஸ் படத்தில், ஒரு பாட்டுக்கு நடனமாடி உள்ளார். ஏற்கனவே, ஷாரூக் கானின் தீவிர ரசிகையான ப்ரியாமணி, இந்த படத்திற்கு பின் அவரது தோழியாகவும், நெருங்கி விட்டாராம்.