சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” |
ஹிந்தித் திரையுலகத்தில் சில நடிகர், நடிகைகளைத் தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வரும் கங்கனா ரணாவத் தற்போது ரன்பீர் கபூரை கடுமையாக விமர்சித்துள்ளார். ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் நடிக்க ராமாயணத்தைத் தழுவி நிதிஷ் திவாரி படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதில் ராமர் ஆக ரன்பீர் கபூர் நடிப்பது குறித்துத்தான் கங்கனா, பெயர் எதையும் குறிப்பிடாமல் இப்படி மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில் அடுத்து வர உள்ள பாலிவுட் ராமாயணம் பற்றிய செய்தி ஒன்றைக் கேள்விப்பட்டேன். ஒரு ஒல்லியான வெள்ளை எலி, நடிகர் என்று அழைக்கப்படுபவர், அவருக்குக் கொஞ்சம் சூரிய ஒளியும், மனசாட்சியும் தேவைப்படுகிறது. திரைத் துறையில் உள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் கேவலமான பி.ஆர். செய்து பிரபலமடைந்தவர். போதைப் பழக்கத்திற்கும், பெண்கள் பின்னால் சுற்றியதற்கும் பெயர் பெற்றவர். ஒரு டிரையாலஜி (யாரும் பார்க்காத அல்லது அதிக பாகங்களை உருவாக்க விரும்பாத) படத்தில் தன்னை சிவபெருமானாகக் காட்டிக் கொள்ள முயற்சித்தவர். இப்போது ராமபிரானாக வளர ஆசைப்படுகிறார்.
வால்மீகியின் விளக்கத்தின்படி, தனது நிறம், நடத்தை மற்றும் முகத்தோற்றத்தில் ராமனைப் போலவே இருக்கும் ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார், தன்னைத் தானே வளர்த்துக் கொண்டவர் என்று அறியப்பட்ட நடிகருக்கு ராவணன் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்ன மாதிரியான கலியுகம் இது ?. போதைக்கு அடிமையான வெளிறிய தோற்றமுடைய ஒருவர் ராமபிரானாக நடிக்கக் கூடாது, ஜெய் ஸ்ரீராம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டேஞ்சரைக் குறிக்கும் எமோஜி ஒன்றைப் பதிவிட்டு, “நீ என்னை ஒரு முறை அடித்தால் நான் உன்னை சாகும் வரை அடிப்பேன், என்னுடன் பிரச்னை வேண்டாம், விலகி இரு,” எனவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரன்பீர் கபூர் கடந்த வருடம் வெளிவந்த 'பிரம்மாஸ்திரா - பார்ட் 1 - சிவா' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அடுத்து அவரும் அவருடைய மனைவி ஆலியா பட், 'கேஜிஎப்' நடிகர் யஷ் ஆகியோர் நடிக்க நிதிஷ் திவாரி இயக்கத்தில் 'ராமாயணம்' படத்திற்காக ராமன் கதாபாத்திரத் தோற்றத்தின் டெஸ்ட் ஷுட்டிங் பங்கேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால்தான் கங்கனா இப்படி ஒரு பதிவிட்டுள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்கனாவின் எந்தப் பதிவிலும் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை. பத்திரிகைகள் எழுதும் கிசுகிசு பாணியிலேயே அவரது பதிவு உள்ளது.