மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
2017ம் வருடத்தில் அனைவராலும் பாராட்டப்பட்ட படத்தில் நடித்த அறிமுக நாயகியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தொடர்பு கொள்ள முடியாதாம். அவரை படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனரின் கட்டுப்பாட்டில்தான் அந்த நாயகி இருக்கிறார் என்கிறார்கள். யாரிடத்திலும் நடிகை அவ்வளவு சீக்கிரத்தில் அவரது தொலைபேசி எண்ணையும் தருவதில்லையாம். எப்படி தொடர்பு கொள்வது என்று கேட்டால் மெயில் முகவரியைத் தருகிறாராம்.
தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லை என்று சொல்லும் கதாநாயகியைப் பலரும் படத்திற்காக விருதுகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் அவரைப் பிடிப்பது எளிதாக இல்லை என்கிறார்கள். இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடிகையா என்றும் திரையுலகத்தில் ஆச்சரியப்படுகிறார்கள்.
சினிமாவைப் பற்றி அதிகம் தெரியாத நாயகிக்கு பாதுகாப்பாக இயக்குனர் இருக்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். எப்படியோ, முதல் படத்திலேயே பாராட்டுக்களைப் பெற்ற ஒரு குழுவினர் பற்றி இப்படி தகவல் வருவது அவர்களுக்கு நல்லதல்ல.