Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கோடம்பாக்கம் நொறுக்ஸ்

''மூணு வருஷமா, என் படம் எதுவும் வரலை. ஆனாலும், 'இது நம்ம ஆளு' படத்தோட டீஸருக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுத்திருக்கீங்க! இதுக்காகவே, இந்த வருஷம் என் மூணு படங்களை வரிசையா ரிலீஸ் பண்ணி உங்களை குஷிப்படுத்தப் போறேன்!'' - சிம்பு

''வேல்ராஜ் இயக்கத்துல நான் நடிக்கப்போற அடுத்த படத்துக்கு, 45 கோடி ரூபாய் வரைக்கும் செலவு பண்ண தயாரிப்பாளர்கள் ரெடி! எல்லாம், 'வேலையில்லா பட்டதாரி' பார்த்த வேலை! பிப்ரவரியில ஷூட்டிங் போறோம் பாஸ்!'' - தனுஷ்

''குழந்தைங்கன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அதான், அவங்களுக்காக 'குட் ரீட்ஸ்'ன்னு, பத்திரிகை ஒண்ணு ஆரம்பிச்சு, அதுக்கு ஆசிரியராயிட்டேன். ஏய்... நான் யாருன்னு அடையாளம் தெரியுதுல்ல; 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' ஹீரோயின்ப்பா!'' - அபர்ணா

''நல்லா தமிழ் பேசலைன்னா, ரசிகர்களான உங்க மனசுல இடம்பிடிக்க முடியாதாமே! அதான், விழுந்து, விழுந்து தமிழ் கத்துக்கறேன். இப்போ, ஓரளவுக்கு சரளமா தமிழ் பேச ஆரம்பிச்சுட்டேன். அழகுப் பேயான இந்த 'டார்லிங்'கை ஏத்துக்கோங்கப்பா!'' - நிக்கி கல்ராணி

அஜித் ரசிகர்களிடம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'என்னை அறிந்தால்...' படத்திற்கு, 'U/A' சான்றிதழ் கிடைத்துள்ளது. இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு, பிப்ரவரி 5ம் தேதி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

'வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தான், என் வருங்கால கணவர்' என, கூறியுள்ளார், காஜல் அகர்வால்.

'ஆண் நண்பருடன் 'டேட்டிங்' போவதும், ஒயின் குடித்தபடி, பீச்சில் சுற்றுவதும் சுகமான அனுபவம்' என, கூறியுள்ளாராம் இலியானா.

'புலி' படத்தில் பணியாற்றிய படக் குழுவினருக்கு, தங்க நாணயத்தை பரிசளித்து மகிழ்ந்தாராம் விஜய்.

சமீபத்தில், கங்கோத்ரிக்கு சென்ற நயன்தாரா, சன்னியாசி வாழ்க்கை பற்றியும், அதற்கான விதிமுறைகள் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டாராம்.

'சல்மான் கான், இப்போது போலவே எப்போதும், கல்யாணம் செய்யாமல் பேச்சிலராக இருக்க வேண்டும்' என, விருப்பம் தெரிவித்துள்ளார் பிபாஷா பாசு.

Advertisement

டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in