Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சங்கீதத்தை மேலோட்டமாக படிக்க கூடாது கே.ஜே.யேசுதாஸ்

30 ஏப், 2013 - 02:08 IST
எழுத்தின் அளவு:

1940-ல் கேரள மாநிலம், கொச்சினில் அகுஸ்டின் ஜோசப், அலீஸ்குட்டி இவர்களுக்கு மகனாக பிறந்தவர் கட்டாசேரி ஜோசப் யேசுதாஸ். தாஸ்சேட்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் இவர். இவரது தந்தையார் மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராகவும், மேடை நடிகராகவும் விளங்கியவர். இவரே யேசுதாஸ்க்கு ரோல் மாடலாகவும் இருந்துள்ளார். சிறிய வயதில் குடும்ப சூழலால் படிப்பை தொடர முடியவில்லை. இருந்தபோதும் நீ படிக்காவிட்டாலும் தினமும் பாட்டு படிப்பதை விட்டுவிடாதே என்று அவர் தந்தை கூறிய சொல்லை வேத மந்திரமாக ஏற்று 5 வயது முதல் பாட தொடங்கியிருக்கிறார். அப்போது தொடங்கிய இவரது பாடல் பயணம் இப்போது 73 வயதில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக 55 ஆயிரம் பாடல்களை பாடி எவர்கிரீன் பாடகர் என்ற புகழோடு இருக்கிறார்.

யேசுதாஸின் இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் சினிமாவில் பின்னணி பாடகராக இருக்கிறார். தற்போது மலையாளத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் சென்னையில், "உன்னிடம் மயங்குகிறேன்" என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் தனது தந்தைக்கு பாடல்களை பாடி சமர்ப்பணம் செய்தார். இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கே.ஜே.யேசுதாஸ் தனது மலரும் நினைவுகளை அந்த அரங்கில் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது,

* உங்கள் இசைப் பயணம்,  எப்போது துவங்கியது?


ஐந்து வயதிலேயே துவங்கி விட்டது. "படிக்க முடியவில்லை என்றால் கூட, பரவாயில்லை. பாடுவதை மட்டும், விட்டு விடாதே என, என் தந்தையார், அடிக்கடி கூறுவார். இதனால், இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற, ஆர்வம் ஏற்பட்டது. இப்போது கூட, அந்த ஆர்வம் குறையவில்லை.

* இசை துறையி‌ல் உங்களது குரு?

நான் இசை பயின்றது ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமி (கொச்சி), ஸ்ரீ சுவாதி திருநாள் மியூசிக் அகாடமி (திருவனந்தபுரம்), கே.ஆர்.குமாரசாமி மற்றும் கே.சி.கல்யாண சுந்தரம், குஞ்சவேலன் ஆசான், வி.தட்சணாமூர்த்தி, ராமன் குட்டி பாகவதர், சிவராமன் நாயர், செம்மன் குடி ஸ்ரீநிவாச அய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்றவர்கள் தான். இவர்களை இன்றளவும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

* சென்னைக்கு  வந்தது எப்போது?

குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக, பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. இதனால், விவரம் தெரிந்ததும், சென்னைக்கு வந்து விட்டேன். பெரம்பூரில் தான், தங்கியிருந்தேன். அங்கிருந்து, மாம்பலம் வரைக்கும், நடந்தே வருவேன். அதுவும், ஏதாவது ஒரு ராகத்தை பாடிக் கொண்டே நடப்பேன். மாம்பலத்தில் எனக்கு தெரிந்த ஒருவர், மதிய சாப்பாடு வாங்கித் தருவார். அதனால் தான், பெரம்பூரிலிருந்து, மாம்பலத்துக்கு நடை பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.

* உங்கள் வளர்ச்சியில்...?


லீலா அக்கா தான் என்னை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் அறிமுகப்படுத்தினாங்க. ஸ்ரீதர் இயக்குனரின் காதலிக்க நேரமில்லை படத்தில் பாடத்தொடங்கினேன். என் வளர்ச்சிக்கு எம்.எஸ்.வி. அய்யாவின் பங்கு பெரிதும் இருக்கிறது. ‌எனக்கு நிறைய நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார்.

* பழைய பாடல்களில் உங்களை கவர்ந்தது?


சுசீலா அம்மா பாடிய, "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் என்ற, பாடலில், பல விஷயங்கள் உள்ளன. அந்த பாடலில் உள்ள, ஏற்ற இறக்கங்களை கவனித்தால், அதில், எவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளன என்பது, தெரியும். இப்போதுள்ள பாடகர்கள், அந்த பாடலை, 10 தடவை கேட்டால் போதும்.

* எத்தனை மொழிகளில்  பாடியுள்ளீர்கள்?


மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியிருக்கிறேன்.

* தற்போதைய  பாடகர்கள் குறித்து?

இப்போதைய பாடகர்கள், பாடல்களை பாடும்போது, கை, கால்களையும், உடலையும், ஆட்டி, அசைவுகளை வெளிப்படுத்தி, பாடுகின்றனர். இந்த டிரெண்ட், இப்போ, ஜாஸ்தியா இருக்கு. இந்த அசைவுகளை எல்லாம் குறைத்து, குரலில் கவனம் செலுத்தினால், திறமையை நன்றாக வெளிப்படுத்தலாம். சங்கீதத்தை மேலோட்டமாக படிக்க கூடாது.

* விஜய் யேசுதாஸ் பற்றி...?

நான் கடவுள்கிட்ட நல்லது பண்ற நல்ல ஞானம் உள்ள குழந்தைகளை கொடு இறைவானு வேண்டினேன். நான் பட்ட கஷ்டங்களை உணர்ந்து என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். அதேமாதிரி இப்ப விஜய் யேசுதாஸ் சின்ன வயசிலே அவர் ஒரு சமூக பொறுப்புடன் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பிள்ளைங்க எப்பவும் பெற்றோருக்கு நல்ல முறையில பேர் சொல்லும் பிள்ளையா வரணும், வளரணும்னு வேண்டி கேட்டுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

HARINARAYANAN - Chennai,இந்தியா
30 ஏப், 2013 - 17:57 Report Abuse
HARINARAYANAN ஜேசுதாஸ் இது போல கமெண்ட் அடித்ததில்லை..... அவருக்குள் இருக்கும் உறுத்தல் வெளி வந்திருக்கிறது.... விஷயத்தை விட அலட்டல் ஜாஸ்தி இருக்கும் இன்றைய பாடகர்களுக்கு நல்ல அட்வைஸ்..... பழைய பாடல்களில் அவருக்கு பிடித்த பாடல் உண்மையில் ஒரு சிறந்த கம்போசிங்.... கேட்டாலே மனதை தாலாட்டும் ஒரு பாடல்..... சுசிலாவின் குரல் வளம் அதில் நன்கு தெரியும்....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
01 மே, 2013 - 18:04Report Abuse
சு கனகராஜ் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும் தமிழில் பல அற்புத பாடல்களை பாடியுள்ளார்...
Rate this:
Kannan - Chennai,இந்தியா
30 ஏப், 2013 - 16:59 Report Abuse
Kannan பல பாடல்கள் உச்சரிப்பு தவறாக பாடியவர்.. "தெரு" கோயிலே , "கிலியே" போன்றவை
Rate this:
தேவாங்கு - chennai,இந்தியா
01 மே, 2013 - 11:23Report Abuse
தேவாங்குஅதை பத்தி, அவரே வருத்தப்பட்டு சொல்லி இருக்காரே 'எனக்கு தாய் மொழி தமிழ் அல்ல. ஆனால், வார்த்தை உச்சரிப்பில் நான் செய்த தவறு எனக்குத் தெரியாமல் ஏற்ப்பட்ட ஒன்று. அதை, பாடல் எழுதியவரோ, இசையமைப்பாளரோ எடுத்துக்கூறி இருந்தால், அப்பொழுதே திருத்திக்கொண்டிருப்பேனே'-ன்னு சொல்லி இருக்காரு. அது தெரியாம, ஒரு மிக சிறந்த பாடகரை, சங்கீத மேதையை, ஒரு நல்ல மனிதனை, குறைச்சிப் பேசாதீங்க. முதல்ல, தமிழர்களாகிய நாம, தமிழை சரியா பேசுவோம். அப்புறம், நாட்ட திருத்தலாம்...
Rate this:
p.saravanan - tirupur,இந்தியா
30 ஏப், 2013 - 14:47 Report Abuse
p.saravanan இயல் இசை கீதமே .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in