‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த '96' கடம் பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்து பலரது பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் ஷங்கர் '96' படத்தைப் பார்த்து அதைப் பற்றிய பாராட்டுக்களை அவரது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். “96, பெரும்பாலும், அல்லது சில இடங்களில் நாம் தனிப்பட்ட முறையில் படத்துடன் இணைந்திடுவோம். விஜய் சேதுபதியின் அருமையான நடிப்பு, த்ரிஷாவைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரேம்குமாருக்கு வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார். மேலும் 'ராட்ச்சன்' படத்தையும் ஷங்கர் பாராட்டியிருக்கிறார்.
இயக்குனர் பாண்டிராஜும் சமீபத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற 'பரியேறும் பெருமாள், 96, ராட்சசன்' ஆகிய படங்களைப் பாராட்டியிருக்கிறார். “எனது அடுத்த படக் கதை விவாதத்தில் இருந்ததால் , தாமதமாக பார்த்தாலும் ... அழகான 3 கவிதைகள்,” என பாராட்டியிருக்கிறார்.