‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சினிமா வாய்ப்பு தேடி ஸ்டூடியோக்களின் படிகட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த காலம்... அப்போது பிரமாண்ட படங்களை தயாரித்துக் கொண்டிருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் 1948ம் ஆண்டு அபிமன்யூ என்ற படத்தை தயாரித்தது. இந்தப் படத்தில் நடிக்க நாடக நடிகர்களுக்கு ஆடிசன் நடத்தியது.
இந்த ஆடிசனில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அன்றைய முன்னணி நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அபிமன்யூவாக நடிக்க தேர்வானது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்த நாடக நடிகர் எம்.எஸ்.குமரேசன். அப்போது அவர் நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு குமரேசனின் தந்தை அர்ச்சுனராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. யுத்த களத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு கிடக்கும் அபிமன்யூவை அப்பா அர்ச்சுனனான எம்.ஜி.ஆர் மடியில் தூக்கி வைத்து கதறும் காட்சி அந்த காலத்தில் மக்களை அழவைத்தது.