‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'பிக்பாஸ்' பிரபலங்களான ஹரீஷ் கல்யாணும், ரைசாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். 'காதலுக்கு ஹிந்தியில் பியார் என்றும், தெலுங்கில் பிரேமா என்றும் தமிழில் காதல் என்றும் சொல்லுவதால் அதையே படத்திற்கு 'பியார் பிரேமா காதல்' என்று இந்த வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். பல குறும்படங்களை இயக்கிய வரும், கிருஷ்ணா நடிப்பில் 'கிரகணம்' படத்தை இயக்கியிருப்பவருமான இளன் இயக்குகிறார். 'பாகுபலி-2' படத்தை தமிழில் வெளியிட்ட கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அனைத்து பாடல்களின் கம்போசிங்கை சமீபத்தில் மலேசியாவில் முடித்துவிட்டு திரும்பியுள்ளனர். இந்தப் படத்தில் யுவன்சங்கர்ராஜா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.