‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஆக.,17) நள்ளிரவு 12.01 மணிக்கு யு-டியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. டிரைலரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தல ரசிகர்கள், லைக் பட்டனை தெறிக்க விட்டனர். டிரைலர் வெளியாகும் முன்பே விவேகம் டிரைலர் ஹேஸ்டேக்கை இந்திய அளவில் முதலிடத்தில் டிரண்ட் செய்தனர் அஜித் ரசிகர்கள்.
சரியாக டிரைலர் வெளியாகி 31வது நிமிடத்தில் 1 லட்சம் லைக்குகளை தாண்டி சாதனை படைத்தது. 10 மணிநேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களையும், 2.75 லட்சம் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது விவேகம்.
டிரைலருக்கான லிங்க் இதோ : https://www.youtube.com/watch?v=yJdHR8nCYWk