‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
2016ம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் ஆண் பிரபலங்களின் பட்டியலை 'டைம்ஸ்' வெளிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தை மிஸ்டர் வேர்ல்டு 2016 பட்டத்தை வென்ற ரோகித் கன்டெல்வால் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். முதல் 50 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களில் தனுஷ் மட்டுமே 26வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற தமிழ் நடிகர்கள் இந்தப் பட்டியலில் இல்லை.
அதே சமயம், தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு 7வது இடத்தைப் பிடித்துள்ளார். 'பாகுபலி' புகழ் பிரபாஸ் 22வது இடத்தையும், ராணா 24வது இடத்தையும் பிடித்துள்ளார்கள். மலையாள நடிகர்களான துல்கர் சல்மான் 14வது இடத்தையும், நிவின் பாலி 28வது இடத்தையும், கன்னட நடிகரான சுதீப் 43வது இடத்தையும் பெற்றுள்ளார்கள். வாக்களிக்கும் முறையில் இந்த 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
50க்குப் பிறகு உள்ள பட்டியலில் அஜித்குமார், கௌதம் கார்த்திக், மாதவன், சித்தார்த், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகத்தில் விஜய், அஜித் இருவருக்கும் இடையேதான் இந்தக் காலத்தில் அதிகமான போட்டி என்றார்கள். ஆனால், அவர்கள் இருவரும் 50 பேர் பட்டியலில் இடம் பெறாதது அவர்களுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயம்தான். 50 பேருக்குப் பிந்தைய பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இல்லாதது அதைவிட ஆச்சரியமான விஷயம்.