‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள படம் 'சத்ரியன்'. 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' படங்களை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்தில அறிமுகமான மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பல மாதங்களுக்கு முன்பே ரெடியாகிவிட்ட சத்ரியன் படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார்போர்டு உறுப்பினர்கள் 'யு' சர்டிஃபிக்கெட் வழங்கினர். தொடர்ந்து சத்ரியன் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் இறங்கினர்.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விஷால் அறிவித்த ஸ்டிரைக் காரணமாக ரிலீஸ் வேலையை தள்ளி வைத்தனர். வேலை நிறுத்தம் இப்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதால், சத்ரியன் படத்தை அடுத்த மாதம் ஜூன் 9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
'சத்ரியன்' படத்தை தயாரித்திருக்கும் 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பாக உருவாகி வரும் அஜித்தின் 'விவேகம்' ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.