‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அஜய் தேவ்கன் - அஸ்வின் திர் கூட்டணியில் உருவான படம் "சன் ஆப் சர்தார்". 2012ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் சன் ஆப் சர்தார் - தி பேட்டில் ஆப் சாராகிரி என்ற பெயரில் உருவாக உள்ளது. இதிலும் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க இயக்குநர் அஸ்வின் முயற்சி எடுத்து வருகிறார். இதுப்பற்றி அஸ்வின் கூறியிருப்பதாவது... "நானும், அஜய்யும் சன் ஆப் சர்தார்-2 படத்தை உருவாக்கும் எண்ணத்தில் உள்ளோம். இரண்டாம் பாகம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். காமெடி அதிகமாக இருக்கும். இதுதொடர்பாக அஜய்யை சந்தித்து பேசி உள்ளேன். அவர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.