‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன். தற்போது ராஜ்குமார் ராவ் உடன் ‛பேகன் ஹோகி தெறி' என்ற படத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் குலாதியும் நடிக்கிறார். அஜய் கே பன்னாலால் இயக்க அமுல் விகாஷ் மோகன் தயாரிக்கிறார்.
ரொமான்ட்டிக் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மே 26-ம் தேதி, பேகன் ஹோகி தெறி படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒருவாரம் தள்ளிப்போய் ஜூன் 2-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.