காதல் படத்தில் நடித்த சந்தியா, அதன் பிறகு பல படங்களில் நடித்தார். பெரிய அளவில் வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட சந்தியாவுக்கு திடீரென்று தமிழில் வாய்ப்புகள் குறைந்தது. இதனால் மலையாளத்தின் பக்கம் ஒதுங்கி விட்டார். அவர் தமிழில் நடிக்காவிட்டாலும் அவர் நடித்த மலையாளப் படமான சஹஸ்ரம் தமிழில் ரீமேக் ஆகிறது. திடீரென்று உயர் போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை கொலை செய்வது 20 வருடங்களுக்கு முன்பு ஜாதிக் கலவரத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண். அந்த கலவரத்துக்கு காரணமானவர்களை பேய் இப்போது போட்டுத் தள்ளுகிறது. அந்த பேயாக நடித்திருப்பவர் சந்தியா. அதாவது மறு ஜென்மம் எடுத்து பழிவாங்குகிறார். தமிழில் ருத்ராவதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதில் சந்தியாவுடன் சுரேஷ்கோபி, பாலா, இந்திரா கோபாலசாமி நடித்துள்ளனர். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தின் முக்கிய காட்சிகளை அப்படியே வைத்துக் கொண்டு தமிழுக்கென்று தனியாக சில காட்சிகளை படம்பிடித்து ரீமேக் படமாக வெளியிட இருக்கிறார்கள்.