கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சாருலதா படம் தமிழில் அதேபெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஒட்டிபிறந்த இரட்டை பிறவிகளாக நடிகை ப்ரியாமணி நடிக்கிறார். குளோபல் ஒன் ஸ்டுடியோ புரோடக்ஷன் சார்பில் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி தயாரிக்கும் இப்படத்தை கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் இயக்கவுள்ள இப்படத்திற்கு யோகனந்த். எம்.வி பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி பாபு இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.