சக்தி சிதம்பரம் பாரடைஸ் சார்பில் சக்தி சிதம்பரம் தயாரிக்கும் படம் ஓம். ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்க, அவருக்கு ஜோடியாக மாடல் அழகி பல்லவி சுபாஷ் நடிக்கிறார். ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தை இளங்கண்ணன் என்பவர் இயக்குகிறார். தாஜ்நூர் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.