ராம்கோபால்வர்மா வழங்க சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ். சுந்தரலட்சுமி தயாரிக்கும் படம் "இவன் சத்ரியன்".
மாணவர்களை தூண்டிவிட்டு, அவர்களை வன்முறையில் ஈடுபடுத்தி ஆட்சிக்கு வரத்துடிக்கும் அரசியல்வாதிக்கும், அரசியல்வாதியின் சூழ்ச்சியை ஒழித்துகட்டி மாணவர்களை நல்வழிப்படுத்தும் கதாநாயகனுக்கும் நடக்கும் கதை தான் இவன் சத்ரியன்.
ஜெகபதிபாபு, விமலாராமன், கோட்டா சீனிவாசன், ரேவதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த ராம்கோபால் வர்மா தெலுங்கில் இயக்கிய "காயம்-2" படத்தின் தமிழ் ரீமேக்தான் "இவன் சத்ரியன்". இப்படத்தை பிரவீன் இயக்குகிறார். ராம்கோபால் வர்மா வழங்க சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இப்படம் இம்மாதம் திரைக்கு வர இருக்கிறது.