இந்தியாவின் தலைசிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.நாகிரெட்டியின், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பலவெற்றி படங்கள் வெளிவந்துள்ளன. பி. நாகிரெட்டியின் நல்லாசியுடன், பி.பாரதி ரெட்டி தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் வேங்கை. ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த ஆக்ஷன் படம் தான் வேங்கை.
காதல் பாங்கான கதைகளிலே நடித்து வந்த தனுஷ், இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்க உள்ளார். படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், கலாபவன்மணி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன், பொன்வண்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, ஊர்வசி, ஐஸ்வர்யா, ஜி.சீனிவாசன், பறவை முனியம்மா, பயில்வான் ரங்கநாதன், அழகு, ஜெயமணி, பெஞ்சமின் ஆகியோரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா பாடல்கள் எழுதுகின்றனர், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.