மீரா ஜாஸ்மின் தெலுங்கில் நடித்த படம் கோரிண்டாகு. இந்தபடம் தமிழில் மருதாணி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் டாக்டர் ராஜசேகர் ஹீரோ. அவரது தங்கையாக நடித்திருந்தார் மீரா. வி.ஆர்.பிரதாப் இயக்கியிருந்த இந்தப் படம் ஆந்திராவில் ஹிட். படத்தில் நடித்திருந்த இன்னொரு முக்கியமான நபர் ஜெய் ஆகாஷ். படத்தை ரீமேக் செய்யாமல் தமிழுக்கு ஏற்றபடி சில காட்சிகளை மட்டும் படமாக்கி இணைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த வேலைகளை விஜய் பிலிம்ஸ் பிரபாகர் செய்து வருகிறார்.