பிளஸ்ஸிங் எண்டடெய்னர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் பிரபாதீஷ் சாமுவேல் தயாரிக்கும் புதிய படம் அறியான். இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம் எழுதி கார்த்திகேயன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். அறியான் படத்தில் புதுமுகம் ஆதித்யா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த ராகிணிதிவேதி நடிக்கிறார். இவர்களுடன் ராஜலட்சுமி, பக்ரூ, மயில்சாமி, நந்தா சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
விளம்பரப்பட இயக்குனரான கதாநாயகனின் வாழ்க்கையில் தொடர்ந்து அவன் எதிர்பாராத பல விஷயங்கள் நடக்கின்றன. கல்லூரி மாணவியான கதாநாயகி உடன் ஏற்படும் காதலும் பிரச்சனையாகிறது. இதன் பின்னணி என்ன என்று தெரியாமல் குழப்பும் கதாநாயகன் பிறகு அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றியடைகிறான் என்பதே அறியான் படத்தின் கதை. ஒளிப்பதிவு - சாலை கண்ணன், இசை - விக்ரம்வர்மன், பாடல்கள் - யுகபாரதி. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல் உள்பட பல இடங்களில் நடைபெற்று வருகிறது.