கவுடம் மேனனின் துணை இயக்குனராக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் மகிழ்திருமேனி இயக்குனராக அறிமுகமாகும் படம் முன்தினம் பார்த்தேனே! மெல்லிய உணர்வுகளை கொண்ட மொத்த குடும்பத்தினருக்குமான இளைஞர்களின் படம் இது. இருபதுகளின் பின்பாதியில் இருக்கும் மேல் மத்திய வர்க்க நண்பர்களின் யதார்த்தமான கதை. "திட்டமிட்டு வயப்படுவதல்ல காதல்...தானாக வருவது" என்று சொல்லும் ஒரு திரைப்படம். காதல் திரைப்படங்கள் ஒன்றும் புதிதல்ல தான். ஆனால், காதல் பற்றி ஒரு புதிய நோக்கையும் பரிமாணத்தையும் இந்த படம் கொண்டிருக்கும் என்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி.
கதாநாயகனாக சஞ்சய்யும், கதாநாயகிகளாக ஏக்தா, லிஸ்னா மற்றும் பூஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கதைப்படி நாயகன் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறார். நாயகிகளில் ஒருவர் கதாநாயகனுடன் பணிபுரிபவராகவும் மற்றவர் ஒரு நடன ஆசிரியையாகவும் மூன்றாமவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும் படத்தில் தோன்றுகின்றனர். இந்த நான்கு முக்கிய கதாபாத்திரங்களோடு அவர்களுடைய நண்பர்களாக இளைஞர் மற்றும் இளைஞியர் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.
ஒளிப்பதிவு - வின்சென்ட், இசை - தமன் சாய். படத்தொகுப்பு - ஆண்டனி.