கார்த்திக்
ரிதிமா மறைந்த நடிகர் ரகுவரன் இறப்பதற்கு முன்பு கடைசியாக நடித்த படம்தான் உதயநேரம். இந்த படத்தின் நாயகனாக நடிகர் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரிதிமா என்ற அறிமுக நாயகி நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, மணிவண்ணன், ரகுவரன், செந்தில் வையாபுரி, தாமு, அஜய்ரத்தினம், விந்தியா, ராதிகா சவுத்ரி, நளினி உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
டைரக்டர் கவுரி மனோகர் இயக்கும் இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கவர்னரை காப்பாற்றும் போராட்டத்தில் கார்த்திக் போடும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. படத்தில் இடம்பெறும் ஸாரி ஆண்ட்டி... சாரி அங்கிள் என்ற பாடலை சிலம்பரசன் பாடியிருக்கிறார். இதுதவிர வித்தியாவுக்காக உருவாக்கப்பட்ட சின்ன பொண்ணு... சின்ன பொண்ணு என்ற கவர்ச்சி பாடலும்,, நேற்று வரை தனிமையிலே... இன்று முதல் இனிமையிலே... என்ற மெலோடி பாடலும், இடி... இடி... அந்த கொட்டப் பாக்க இடி... என்ற கிராமிய குத்துப் பாடலும் இடம்பெற்றுள்ளது.
ஏ.ஆர்.எம்.மோகன், நன்னிலம் எஸ்.ஜோடி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவா இசையமைத்திருக்கிறார். பாடல்களை கவிஞர் மு.மேத்தா, பா.விஜய், பழனிபாரதி, காமகோடியான், பொன்னியின் செல்வன், புலவர் சிதம்பரநாதன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.