இயக்குனர்கள் நடிகர்கள் ஆகும் வரிசையில் அடுத்து இடம்பிடிக்கப் போகும் டைரக்டர் ஸெல்வன் நடிக்கும் படம் மாக்கான். படத்தின் டைட்டிலுக்கு ஏற்றாற்போல கரடு முரடாக இல்லாமல் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவுள்ள இப்படத்தில் ஸெல்வனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சாவ்லா நடிக்கிறார். தற்போது கிருஷ்ண லீலை படத்தை இயக்கி முடித்துள்ள ஸெல்வன் அடுத்து மாக்கானில் நடித்து வருகிறார். ஜூன் மாதம் முதல் மாக்கான் விறுவிறுவென வளரத் துவங்குவான் என்கிறார் படத்தின் அறிமுக இயக்குனர் முரளிசாமி. இவர் ஸெல்வனிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.