வெளுத்துகட்டு கதிர், மான் கராத்தே புகழ் வம்சி கிருஷ்ணா இணைந்து நடிக்கிற படம் களவு தொழிற்ச்சாலை. மும்பை மாடல் குஷி ஹீரோயின். இயக்குனர் களஞ்சியம் வில்லன். டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்குகிறார். இது சிலை கடத்தும் சர்வேத கும்பலை பற்றிய கதை.
இதன் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் உள்ள பாழைடந்த கோவில்களில் நடந்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் ஒரு ரகசிய சுரங்கப் பாதைக்குள் நடக்கிறது. தமிழ்நாட்டில் சில முக்கிய கோவில்களை ஒட்டி இத்தகைய சுரங்க பாதைகள் உள்ளன. அங்கு படப்பிடிப்பு நடத்த தொல்பொருள் ஆய்வுத்துறை அனுமதி தராததால் செயற்கையாக பூமிக்கு அடியில் 300 அடிக்கு சுரங்க பாதை அமைத்து படம் பிடித்துள்ளனர்.