Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

அன்றொரு நாள்

அன்றொரு நாள்,
  • அன்றொரு நாள்
  • ஜெய்கிருஷ்ணா
  • மைதிலி
  • இயக்குனர்: எம்.அருள்முருகன்
19 பிப், 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » அன்றொரு நாள்

முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லருடன் காமெடியாக உருவாகி வரும் படம் அன்றொரு நாள்.  இந்த படத்தை யாமினி கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் கே.பி.ஆர்., தயாரிக்கிறார். படத்தின் நாயகனாக புதுமுக நடிகர் ஜெய்கிருஷ்ணா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக  புதுமுக நடிகை மைதிலி நடிக்கிறார். இவர்களுடன் செந்தில், ராஜன், பி.தேவ், பொன்னம்பலம, கிரேன் மனோகர், நெல்லை சிவா, பாரதி கண்ணன், சத்யப்ரியா, தயாரிப்பாளர் கே.பி.ஆர்., உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் டைரக்டர் எம்.அருள்முருகன். க்ரைம் த்ரில்லருக்கு முக்கியத்துவம் அளித்தாலும், காமெடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ள அன்றொரு நாள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக ஒரு பாடல் இடம்பெறுகிறாதாம். முதன் முறையாக 9 அரவாணிகள் ஒரு பாடலை பாடி அசத்தியிருக்கிறார்களாம். அவர்களோடு 6 வெளிநாட்டு அழகிகளும் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார்களாம்.

இசையமைப்பாளர் இண்டியன் இசையமைக்க, மேத்யூராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in