எஸ்.ஆர்.பி. புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் படத்தின் பெயர்தான் பக்தன். இப்படத்தில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்கிறார். நாயகியாக மதிஷா தோன்றுகிறார். வில்லனாக ராம் என்பவர் அறிமுகமாகிறார்.
ஒரேயொரு பாடலுக்கு ஸ்ரீபாரதி என்ற புதுமுக நாயகி குத்தாட்டம் போட்டிருக்கிறார். பிரபல இயக்குனர் பாசிலிடம் உதவியாளராக பணிபுரிந்த மல்லிகை ராஜன் என்பவர்தான் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் தமிழ் திரையுலகின் 34 வருட அனுபவசாலி என்பது குறிப்பிடத்தக்கது.
பொருந்தா காதலையும், அதன் விரும்பத்தகாத விளைவுகளையும் முற்றிலும் புதுமையாக கூறும் படம்தான் பக்தன், என்கிறார் இயக்குனர் மல்லிகை ராஜன். மாற்றான் மனைவி என்பது தெரியாமல் அவள் மீது மையல் கொள்ளும் கதாநாயகன், உண்மை தெரிந்ததும் எடுக்கும் அதிரடி முடிவுகள் தமிழ் திரையுலகிற்கு புதிய அம்சமாக இருக்கும் என்று சொல்லும் இயக்குனர், காமம் சார்ந்த கதையாக இருந்தாலும், ஆபாசம் துளியும் இருக்காது, என்கிறார்.
ஒளிப்பதிவாளர் செல்வா ஒளிப்பதிவு செய்ய, விஸ்வகுரு என்பவர் இசையமைக்கிறார்.