கன்னட நடிகை சுவேதாராவ் தற்போது தமிழில் என்றுமே ஆனந்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். உடன் நடிப்பவர் மாஸ்டர் மகேந்திரன். க.விவேகபாரதி டைரக்ட் செய்துள்ளார். விவேகா இதற்கு முன்பு இரண்டு தமிழ் படங்களில் நடித்தார். அது வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. அதனால் இந்தப் படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
"நிச்சயம் இது சுவேதா ராவுக்கு தமிழ் இண்டஸ்ரியில நல்ல இமேஜை கொடுக்கும். முற்றிலும் புதிதாக சொல்லப்பட்டிருக்கும் லவ் ஸ்டோரி. எத்தனை காலம் மாறினாலும் காதல், அன்பு, நட்பு, இவை மட்டும் மாறாது, காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டே இருக்கும். இவைகள் இன்றைய இளைஞர்களிடம் எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தில் சொல்கிறேன். ரிலீசுக்கு படம் ரெடியா இருக்கு. டிசம்பர் கடைசி வீக்கில் ரிலீஸ் பண்றோம்" என்கிறார் டைரக்டர் விவேகபாரதி.