புதிய தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கும் காமெடி படம் "நாலு பேரும் ரொம்ப நல்லவங்க". திருடர்கள் மூன்று பேர் திருட்டை வெறுக்கும் பவர் ஸ்டாரை சந்திக்கிறார்கள். இவர்கள் பவர் ஸ்டாரை திருடனாக்க முயற்சிப்பதும், பவர் ஸ்டார் இவர்களை திருத்த முயற்சிப்பதும்தான் கதை. இறுதியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது படத்தின் கிளைமாக்ஸ் கம் மெசேஜ். சினேஹல், திஷா என்ற ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களில் திஷா பவர் ஸ்டாரின் ஜோடி. பாலாஜி, திருப்பதி, யாசின் என்ற முன்று புதுமுகங்களும் திருடர்களாக நடிக்கிறார்கள். ஜோவி என்ற புதுமுகம் இயக்குகிறார். யுவன் இசை அமைக்கிறார். வருகிற மார்ச் 14ந் தேதி ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.