ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானவர் அஜய் கிருஷ்ணன். உதித் நாராயணன் பாடிய பல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். சமீபத்தில் வெளியான கோமாளி படத்திலும் ஒரு பாடலை பாடி சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமாகியுள்ளார். அஜய் கிருஷ்ணா, ஜெஸ்ஸி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர்.
அஜய் கிருஷ்ணாவுக்கும், ஜெஸ்ஸிக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில், அவர்களது திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அஜய் கிருஷ்ணாவின் திருமணத்திற்கு தொலைக்காட்சி பிரபலங்கள், சூப்பர் சிங்கரில் பயணித்த சக தோழர்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.