உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தவர் பிரபாஸ். அதன்காரணமாக அவர் உலகம் முழுக்க பிரபலமானார். அதையடுத்து அவர் நடித்த சாஹோ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனபோதிலும் தற்போது சலார், ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் 25வது படத்தை நாக் அஸ்வின் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். இந்த படமும் பிரபாஸின் முந்தைய படங்களைப்போன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வருகிற 7ந்-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.