'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவின் விஜய் சேதுபதியும் சரி, மலையாள சினிமாவின் பஹத் பாசிலும் சரி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்கமால் ஏற்று நடிப்பவர்கள்.. அதனால் தான் இப்போது லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கூட இருவரும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இதற்கு முன்னதாக சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தில் இவர்கள் இணைந்து நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காட்சி ஒன்று கூட படத்தில் இல்லை. ஆனால் விக்ரம் படத்தில் பல காட்சிகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனராம்.
அந்தவகையில் சமீபத்தில் இவர்கள் இருவரையும் வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அப்படி படமான காட்சியை அவருடன் சேர்ந்து விஜய்சேதுபதியும் பஹத் பாசிலும் மானிட்டரில் பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்று விக்ரம் படக்குழுவினரால் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகியுள்ளது.