அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழ் சினிமாவின் முக்கியமான சங்கங்கள் இரண்டாக உடைந்து வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என மூன்று சங்கமாக உடைந்துள்ளது. தற்போது விநியோகஸ்தர்கள் சங்கமும் உடைந்துள்ளது. நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சங்க தலைவராக டி.ஏ.அருள்பதி, துணை தலைவர்களாக செண்பகமூர்த்தி, அழகர்சாமி, செயலாளராக கே.ராஜமன்னார், இணை செயலாளர்களாக மணிகண்டன், துரைராஜ், பொருளாளராக ரவிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் என்.முரளி ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன் , நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், சுரேஷ் காமாட்சி, திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.