அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர் ஆனந்த கண்ணன்(48). சிங்கப்பூர் தமிழனான ஆனந்த கண்ணன், அந்நாட்டில் ஒளிபரப்பாகும் வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பின் தமிழகம் வந்த அவர், சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இணைந்து மிகவும் புகழ் பெற்றார்.
தொடர்ந்து சிந்து பாத், விக்கிரமாதித்தன் போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில் சினிமா வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரையிலும் வலம் வந்த ஆனந்த கண்ணனுக்கு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா படம் மட்டுமே ஓரளவு பாஸிட்டிவாக அமைந்தது. இவர் நடிப்பில் உருவான முள்ளும் மலரும், இத்தனை நாள் எங்கிருந்தாய்? ஆகிய படங்கள் ரிலீஸாகவில்லை.
தனக்கான வாய்ப்புகள் குறையவே சிங்கப்பூர் சென்ற ஆனந்த கண்ணன் மீண்டும் வசந்தம் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை முறையாக பயின்ற ஆனந்த கண்ணன், ஆனந்த கூத்து என்ற பயிற்சி அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 16 நேற்று, ஆனந்த கண்ணன் மரணம் அடைந்துள்ளார். அவர் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியாத நிலையில் அரிதான புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கட்பிரபு இரங்கல்
ஆனந்த கண்ணன் இறந்த தகவலை அவரது நண்பர் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
ஆனந்த கண்ணன் மறைவுக்கு ஏராளமான ரசிகர்களும் தங்களது இரங்கல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.