பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இப்போதைய இயக்குனர்களில் காதல் படங்களின் ஸ்பெஷல் இயக்குனர் என தாராளமாகக் குறிப்பிடலாம். இளம் தலைமுறை இயக்குனர்கள் சிலர் புதிதாக வந்தாலும் இருபது வருடங்களாக இன்றைய தலைமுறை ரசிகர்கள் ரசிக்கும் விதத்திலும் காதலைச் சொல்லி வருபவர்.
'காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா' படங்கள் பல காதல் படங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் அது மிகையில்லை. இப்படி சில பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கௌதம் மேனன் கடந்த சில வருடங்களாக தடங்கல்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அவரது இயக்கத்தில் வந்த 'அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் படப்பிடிப்பு ஆரம்பமாகி சில வருடங்கள் இ......ழுத்து, பிறகே வெளிவந்தன.
தற்போது அவரது இயக்கத்தில் 'ஜோஷ்வா இமை போல் காக்க, துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களும் முடிந்தும், முடியாமலும் திரையைப் பார்க்காமல் தவித்து வருகின்றன. அதற்குத் தீர்வு காணாமல் அடுத்ததாக சிம்பு கதாநாயகனாக நடிக்க 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்தார்.
சொல்லி வைத்தாற் போல அந்தப் படம் ஆரம்பமாவதற்கு முன்பே சிக்கலை சந்திக்கத் தயாராகிவிட்டது. சிம்பு சம்பந்தப்பட்ட 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட பிரச்சினையால் கவுதம் மேனன், சிம்பு மீண்டும் இணையும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தைத் திட்டமிட்டபடி ஆரம்பிக்க முடியவில்லை.
ஏற்கெனவே, இரண்டு படங்கள் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் போது, புதிய படமும் இப்படி சிக்கலை நோக்கி இருக்கிறதே என திரையுலகத்தில் உள்ள சிலர் இப்போது அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.