அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவது தற்போதுதான் சூடு பிடித்து வருகிறது. 'ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை' என இரண்டு பெரிய படங்கள் வெளியான நிலையில் அடுத்தடுத்து மேலும் சில புதிய படங்கள் வாரம்தோறும் வெளியாக உள்ளது.
ஓடிடி தளங்களுக்குப் போட்டியாக டிவிக்களிலும் நேரடியாக படத்தை வெளியீடு செய்வதும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் டிவியில் நேரடியாக வெளியான சில சிறிய படங்களுக்கு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது. அதையே பெரிய படங்கள் என மாற்றி பெரிய வரவேற்பை பெற சில டிவி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
அதில் தற்போது ஒரு முன்னணி டிவி, விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்,', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்', த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' உள்ளிட்ட சில படங்களை நேரடியாக டிவியில் வெளியிட பேசி வருகிறதாம். அப்படி கிடைக்காத சில படங்கள், வேறு ஓடிடி நிறுவனங்கள் வாங்கிய படங்களை உடனடியாக டிவியில் ஒளிபரப்பவும் பேசி வருகிறார்களாம்.
வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என வர உள்ள பண்டிகை நாட்களில் இப்படி டிவியில் நேரடியாக முதல் முறை என சொல்லுமளவிற்கு சில பெரிய படங்கள் இடம் பெறும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்பட்டால், சில படங்கள் நம்மைக் காப்பாற்றும் என தியேட்டர்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் படங்கள், இப்படி ஓடிடி, நேரடி டிவி என போவதைக் கண்டு தியேட்டர்காரர்கள் திகைத்துப் போயிருப்பதாகவும் தகவல்.